அழகர் சாமியின் குதிரை

அழகர் சாமியின் குதிரையை போலவே, அந்த திரைப்படமும் எங்கள் ஊரை விட்டு ஓடிவிட்டது என்று நினைத்து வருத்தபட்டு ஒரு வாரம் கழித்து மீண்டும் நான் ஊர் திரும்பிய போது, அப்பா அதை கண்டு ‘பிடித்து’ வைத்திருந்தார்.எங்கள் ஊரிலும் மல்டிப்ளெக்ஸ் எல்லாம் வந்து வருடம் பல ஓடிவிட்டது.மற்ற தியேட்டர்களையெல்லாம் மறந்தும் விட்டோம்.நேரில் போய் டிக்கேட் வாங்குவதில்லாம் தொன் மரபாகிவிட்டது.அப்படி ஒரு சிறிய தியேட்டரில் படம் இளைப்பாறிக் கொண்டிருப்பது அறிந்து, அது ஓடுவதற்குள் பிடித்துவிட வேண்டும் என்ற அவசரத்தில் நேற்று மாலையே அடித்து பிடித்து மாலைக் காட்சிக்கு சென்று மூச்சிரைக்க 6:29 கு தியேட்டருக்குள் நுழைந்தோம்.ஒரே ஒரு கார் மட்டும் உள்ளே நின்றிருந்தது.அட்களே இல்லை.பதறி போய், காட்சி ஆரம்பித்துவிட்டதோ என்று அங்கிருந்த பெரியவரைக் கேட்டோம்.பார்கின் டிக்கெட் விற்பவர்.6 30 மணிக்குத் தாங்க படம் என்றார்.எதுக்கும் ஒரு முறை புரியாமல் கை கடிகாரத்தைப் பார்த்து முழித்தோம்.ஆளே இல்லாத டிக்கெட் கௌண்டர் உள் செல்லலாம் என்றார்.அதிகபட்சம் முப்பது ரூபாய்க்குத் தான் டிக்கெட் தருவார்களாம்.அது முதல் வகுப்பு டிக்கெட்.நாங்கள் நுழைந்தது, பின்னால் ஒருவர் தொடர்வது கண்டு, வரிசை சேர்வது போல நினைத்தேன்.அவர் எங்களை கடந்து, டிக்கெட் கவுண்டரைக் கடந்து தியேட்டர் காண்டீன் கவுண்டருக்கு சென்றுவிட்டார்.

பரந்து விரிந்த தியேட்டருக்குள், பத்துபேர் அமர்ந்திருந்ததே ஆறுதலாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது.எல்லாம் ஒரே சமமான தரை.நல்ல மின் விசிறிக் காற்றடியில் அமர்ந்தோம்.மெதுவாக இன்னும் இரண்டு மூன்று பேர் நுழந்தார்கள்.அங்கு வந்திருந்தவர்கள் ஏன் அங்கு வந்திருப்பார்கள் என்பதை சுற்றியே ஒவ்வொரு படம் எடுத்துவிடலாம் என்று தோன்றியது.ஒருவர் ஒரு உருண்ட அடைக்கப்பட்ட தோள் பையுடன் வந்திருந்தார்.ஒன்று இரண்டு குடும்பங்கள் வந்திருந்தன.சம்கி புடவையும், கையில் பையுமாக.நாங்கள் அமர்ந்திருந்த பாடத்திலேயே மொத்தம் நாங்கு பேர் தான்.பத்து ரூபாய் டிக்கெட் வரிசையில் ஒரு பத்து பதினைந்து பேர்.என்ன இருந்தாலும், விளக்குகள் அணைந்து திரை ஒளிரும்போது ஏற்படும் பரவசம் என்றும் குறையாதது.ஒரு காலப் பயணத்திற்கு தயாராவது போல.இன்னொருவரின் கனவிற்குள் நுழவது போல.அதில் தான் ஒரு சிங்கத்தின் பழிவாங்கும் கதையிலிருந்து தூர கிரகங்களில் அட்டூழ்யம் செய்த்த பூச்சிகள் வரை எத்தனை உலகங்கள். படத்திற்கு முன் அதிகம் விளம்பரங்கள் இல்லை.யாரும் படத்தை அலைபேசியிலோ கை காமிராவிலோ பதிவு செய்யக் கூடாது என்ற எச்சரிக்கை அறிக்கைப் பார்த்தபோது தான், இப்படி காலியான தியேட்டர்களில் அதன் வாய்ப்புகள் எத்தனை பிரகாசம் என்று தோன்றியது.

பின் படம் தொடங்கியது.முதலிலேயே பெயர் பட்டியல் போட்டுவிட்டார்கள்.படத்தின் பெயரை தமிழில் ஒருமுறை ஆங்கிலத்தில் ஒருமுறை என்றெல்லாம் போடவில்லை.டைட்டிலில் எழுத்துரு வடிவமைப்பே, அது எத்தனைப் பாசத்துடன் எடுக்கப் பட்டிருகின்றது என்பதை சொல்வது போல் இருந்தது.இனிமையான இசை.நான் வாழ்கையில் நேரடியாக பார்த்த ஒரே கிராம பகுதி ஆண்டிப்பட்டி.என் கல்லூரி தோழியின் வீட்டிற்கு நாங்களெல்லாம் சென்ற போது.இமைகள் மூடாது அந்த பசுமையை விழுங்கிக் கொண்டே இருக்கலாம்.படமும் தேனி மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமம்.அப்பா, இதன் மூலக் கதையை வாசித்திருந்தார்.எனக்கு ஆர் கே நாராயணனின் ‘கிழவனும் இரு ஆடுகளும்’ என்ற கதை தான் நினைவிற்கு வந்தது.கடைசியாக, ‘லகான்’ படத்தில் தான் ஒரு முழு கிராமமும் அதன் வாசிகளும் மிகுந்த சிரத்தையுடன் மறு ஆக்கம் செய்யப்பட்டிருந்தார்கள்.ஆனால், இப்படம் ஒரு வாழும் கிராமத்திலேயே எடுக்கப் பட்டது.கிராமங்களைப் பற்றிய ஒரு உணர்ச்சிகரமான சார்பு நிலை இல்லாமல், இயல்பான சித்தரிப்பு.அதனால தான் படம் முழுவதுமாக ரசிக்கக் கூடிய நகைச்சுவை இருந்தது.கதை எழுதிய பாஸ்கர் சக்தி அவர்களே இதன் திரைக்கதையும் வசனமும் எழுதியிருக்கிறார்.

ஒவ்வொரு கதைபாத்திரமும் நேர்தியாக வடிவமைக்கப் பட்டிருந்தது.ஊர் மதிப்பிற்குரிய வாத்தியாரைய்யாவும் போலீஸ் ஸ்டேஷனில் வந்து ஊர் சிற்றிப் பார்க்க வந்த வெள்ளைக்காரர்கள் தான் குதிரையை திருடுயிருக்க வேண்டும் என்று சொல்லும்போது, கதையின் களன் அழகாக விரிந்தது.குதிரையைத் தேடி வரும் அழகர்சாமி கதையிலிருந்து குதித்து நடமாடுவது போலவே இருந்தது.இதமான இசை.இன்னும் கொஞ்சங்கூட கிராமத்திய வாடையுடன் எல்லா பாடல்களும் இருந்திருக்கலாம் என்று தோன்றியது.அதிகம் இசை ஞானம் இல்லாததால், இதைப் பற்றி என்னிடம் அதிக வாதம் இல்லை.ஒரு வேளை படத்தின் காமிக் உயிரோட்டத்திற்கு ஏற்ப மரபாக அப்படி அமைக்கப் பட்டிருக்கிறது போலும்.

சிறுகதையின் இறுதி திருப்பம் க்ளாசிக்காக இருந்தது.ஆனால், அதை படிக்கும்போது ஏற்பட்டிருக்கக் கூடிய தாக்கம் இன்னும் நீடித்ததாக இருந்திருக்கும்.படமாக மாறும் தோரும் அதன் மொழிபெயர்ப்பு வேறு சில நுட்பங்களைக் கோருகின்றது என்று நினைக்கிறேன்.அதற்க்கு அடுத்த, பிரஸிடெண்ட் அய்யா சாபமிட்டு சரிந்ததும் பெய்யும் மழை ஒரு க்ளாசிக் சினிமா தருணம்.வேவி பார்க்க நியமிக்கப்பட்ட போலீஸ் ஊர் பூசாரியாக பிழைப்பை மாற்றிக்கொள்வது, ஊர் பெரியவர்கள் உள்ளூர் கோடங்கியை அசிங்கப்படுத்துவது,பிரஸிடண்ட் அய்யாவன் மகன் நாத்திகனாக இருப்பது,ஊர் திருவிழா வசூல், குதிரை இறுதியில் எல்லோருக்கும் தண்டனை தன் போக்கில் தந்து ஓடுவது என்று எல்லாமே அலாதியான இலக்கிய அனுபவம்.

கிராமத்தின் மூட நம்பிக்கைகளும், வறுமையும் நல்ல நகைச்சுவைக் களமாக இருந்தாலும், அது கிராம வாழ்க்கையை ரொமாண்டிஸைஸ் செய்யவில்லை, அதே சமயம் வெளிப்படையாக உதாசீனமும் செய்யவில்லை.பிரஸிடண்ட் ஐயாவின் மகன் ஊர் கோணங்கியின் மகளை காவல் நிலையத்தில் மணந்து செல்லும் போது, ஊராரின் சாதி அடையாளங்களும் அதை ஒட்டிய மரபுகளும் மாறாது என்றும் தன் படிப்பை நம்பி எங்காவது சென்று பிழைத்துக் கொள்ளலாம் என்றும் சொல்கிறான்.அந்த தருணம், கிராமம் நிராகரிக்கப் படிகிறது.ஊராரின் இளம் மக்கள் திருப்பூர்க்கு ஆலை வேலை செய்ய அனுப்பப்படுவதும் கிராமத்து வறுமையின் நிதர்சனம். எத்தனை அழகான கிராமங்கள்.எப்படி எதோ காலத்தில் மாடிக்கொண்டு இருக்கின்றன.

நம் மனங்கள் கிராமங்களுக்காக ஏங்குகின்றனவா? இல்லை அவற்றில் இருந்து தப்பிக்க துடிக்கின்றனவா? நம் நகரங்கள் நமக்கு வேண்டிய சுதந்திரத்தையும் வாழ்கையையும் அளிக்கின்றனவா? இல்லை, நம்மை மேலும் தனிமையக்கி வேர்களிலிருந்து துண்டிக்கின்றனவா? இன்னும் பல கேள்விகள்.என்னை போன்று கிரமாங்களையே கண்டிராத சிறு நகர வாசிகளுக்கு, இந்த படம் ஒரு முழுமையான கிராமத்து அனுபவம்.

“குதிக்கிர குதிக்கிர குதிர குட்டி என் மனச காட்டுதே…….”

Advertisement
This entry was posted in Movies. Bookmark the permalink.

One Response to அழகர் சாமியின் குதிரை

  1. mrprajesh says:

    >டிக்கெட் கவுண்டரைக் கடந்து தியேட்டர்
    >காண்டீன் கவுண்டருக்கு சென்றுவிட்டார்
    ROFL, Still laughing …

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s